சிவகார்த்திகேயனுடன் இணையும் விக்னேஷ் சிவன்

சிவகார்த்திகேயனுடன் இணையும் விக்னேஷ் சிவன் தானா சேர்ந்த கூட்டத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து விக்னேஷ் சிவன் படம் இயக்க இருக்கிறார்.

சென்னை : மே-11

நானும் ரவுடிதான் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை இயக்குவதாகத்தான் விக்னேஷ்சிவன் இருந்தார். சூர்யாவை இயக்கும் வாய்ப்பு வந்ததாலும் சிவகார்த்திகேயன் பிசியாக இருந்ததாலும் அது தள்ளிப்போனது.

சிவகார்த்திகேயன் முன்பே ஒப்புக்கொண்டபடி, ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துக்கு படம் நடித்து தர முன்வந்தபோதே, இயக்குனர் விக்னேஷ் சிவனாகத் தான் இருக்ககூடும் என்று தகவல் பரவியது.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக எம்.ராஜேஷ் இயக்கவிருக்கிறார். எம்.ராஜேஷை தொடர்ந்து விக்னேஷ் சிவனுடன் இணைய இருக்கிறாராம் சிவகார்த்திகேயன். இதனை எம்.ராஜேஷ் உறுதிபடுத்தி இருக்கிறார்.

 

Related Posts