சீனாவால் அனுப்பட்ட விண்வெளி ஆய்வு மையம் ஒன்று விரைவில் பூமியில் விழும் வாய்ப்பு

சீனாவால் அனுப்பட்ட விண்வெளி ஆய்வு மையம் ஒன்று செயலிழந்துள்ளதால், விரைவில் பூமியில் விழும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

சீனா : ஜூன்-26

டியான்காங் 2 என்ற விண்வெளி ஆய்வு மையத்தை கடந்த 2016ம் ஆண்டு சீனா விண்ணுக்கு அனுப்பியது. இந்த ஆய்வு மையம் பூமிக்கு மேலே சுமார் 95 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. தற்போது இந்த ஆய்வு மையத்துடனான செயல்பாடுகள் குறைந்துள்ளதால் டியான்காங் 2 விரைவில் பூமியில் விழும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக ஏற்கனவே சீனா அனுப்பிய டியான்காங் 1 என்ற விண்வெளி ஆய்வு மையம் கடந்த ஏப்ரல் மாதம் பூமியில் விழுந்து நொறுங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Posts