சீனாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானந்தாங்கிக் கப்பல் வெள்ளோட்டம்

சீன கடற்படையின் 69-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டாவது விமானந்தாங்கிக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது.

சீனா : ஏப்ரல்-23

உலகின் மிகப் பெரிய ராணுவ பலத்தை வைத்துள்ள நாடுகளுள் ஒன்றான சீனா, தற்போது தனது கடற்படையின் 69-வது ஆண்டு தினத்தை கொண்டாடி வருகிறது. இதை முன்னிட்டு முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது. இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தக் கப்பல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டி முடிக்கப்பட்டது. வரும் 2020-ஆம் ஆண்டு இந்தக் கப்பலை கப்பற்படையில் சேர்க்க சீன அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது சீனாவிடம் லியோனிங் என்ற ஒரே ஒரு விமானந்தாங்கிக் கப்பல் மட்டும் பணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts