சீனாவில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

சீனாவில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சீனா : ஜூன்-27

கடந்த திங்கள்கிழமை முதல் கொட்டித் தீர்த்துவரும் மழையால் தெற்கு மற்றும் தென்மேற்கு சீன பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சிச்சுவான் மாகாணத்தில் ஓடும் கிங்ஜியாங் ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அபாய அளவைத் தாண்டி வெள்ளம் சென்று கொண்டிருப்பதால் மக்கள் கவனத்துடன் இருக்கும் படி, மாகாண அரசுகள் எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளன. கடும் வெள்ளத்தால் சாலைப் போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் முற்றிலும் முடங்கியுள்ளன.

Related Posts