சீனா பூங்காவில் பார்வையாளர்களை கவர்ந்த சைபீரியப் புலி குட்டிகள்

சீன விலங்கியல் பூங்காவில் அரிய வகை சைபீரியப் புலி ஈன்ற 5 குட்டிகள் தற்போது பார்வையாளர்களுக்காகத் திறந்துவிடப்படுள்ளன.

சீனா : மே-22

சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள விலங்கியல் பூங்காவில் பெங்கால் மற்றும் சைபீரியப் புலிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் சைபீரியப் புலி ஒன்று கடந்த மாதம் 5 குட்டிகளை ஈன்றது. பொதுவாக 10 ஆயிரத்தில் ஒரு புலிதான் 4 குட்டிகள் வரை ஈனும். ஆனால் 5 குட்டிகள் ஈன்றது அரிதினும் அரிதாகப் பார்க்கப்படுகிறது. தற்போது 5 குட்டிகளும் பார்வையாளர்களுக்காகத் திறந்து விடப்பட்டுள்ளன.

Related Posts