சீன அதிபருடன் வடகொரியா அதிபர் திடீர் சந்திப்பு

 

 

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை திடீரென சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பரம விரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா – வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் நேருக்குநேர் சந்தித்துப் பேச ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், அறிவிக்கப்படாத திடீர் பயணமாக சீன அதிபர் ஜின்பிங்கை வடகொரியா அதிபர் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வடகொரிய அதிபருக்கு சீன அதிபர் விருந்தளித்து கவுரவித்தார். மேலும், வடகொரியாவின் பொருளாதார வளர்ச்சியில் சீனா உதவும் என அதிபர் ஜின்பிங் உறுதியளித்ததாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Posts