சீராய்வு மனுக்கள் மீது நவம்பர் 13ஆம் தேதி விசாரணை

சபரிமலை தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து சீராய்வு மனுக்கள் மீதும் நவம்பர் 13ஆம் தேதி விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

                சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் 19 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இதனைத்தொடர்ந்து, இன்று நடைபெற்ற விசாரணையில் சபரிமலை விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை வரும் நவம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Related Posts