சுங்கச் சாவடி கட்டணம் குறித்து மு.க.ஸ்டாலின் கண்டனம்

சுங்கச் சாவடிகளில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மொத்தம் 46 சுங்கச்சாவடிகள், தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் உள்ள 15 சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்கள் தற்போது மாற்றியமைக்கப்பட்ட தொகையின் படி 15 ரூபாய் வரை அதிகமாக செலுத்த வேண்டும்.  இந்த கட்டண உயர்வானது, தேசிய நெடுஞ்சாலை கட்டண விதி 2008 -ன்படி மாற்றியமைக்கப்பட்டு உள்ளதாகவும், கட்டண உயர்வு ஞாயிற்றுக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டன உயர்வுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், நடுத்தர வர்க்கத்தினரையும், வணிகர்களையும் பெரிதும் பாதிக்கும் சுங்கச் சாவடிகளில் திடீர்  கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார். அடிப்படை பராமரிப்பு வசதிகளை  மேம்படுத்தாமல் கட்டணத்தை ரகசியமாக உயர்த்துவது அரசின் பகல் கொள்ளை என அவர் விமர்சித்துள்ளார். சுங்கச் சாவடிகள் மக்களின் நலனை சாகடிப்பதாக இருக்கக் கூடாது என்ற கருத்தையும் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Related Posts