சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே என கமல்ஹாசன் பேசியதற்கு  தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் 

அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட கமல் ஹாசன் நாட்டின் முதல் தீவிரவாத தாக்குதல் காந்தி படுகொலை செய்யப்பட்டது தான் என தெரிவித்தார். இதன் மூலம் கோட்சே ஒரு இந்து தீவிரவாதி என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், இந்து தீவிரவாதி என கமல் ஹாசன் கூறியதற்கு கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கை வெடிகுண்டு தாக்குதலுக்கு வாய் திறக்காத கமல் ஹாசன், தமிழகத்தில் ஒற்றுமையை சீர்குலைத்து அதன் மூலம் வாக்கு வங்கியை அதிகரிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். மத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசிய கமல் ஹாசன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Related Posts