சுதந்திர தினம் கொண்டாடிய வெளிநாடு வாழ் இந்தியர்கள்

இந்திய சுதந்திர தினம் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களாலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நூற்றுக்கணக்கான  இந்திய வம்சாவளியினர் இந்திய தூதரக வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மகாத்மா காந்தி நினைவிடத்தில் திரண்டனர்.

மூவர்ணக் கொடிகளை ஏந்தியும் , தேச பக்தி பாடல்களைப் பாடியபடியும் அவர்கள் இந்தியாவின் சுதந்திரத்தைப் புகழ்ந்தனர். அப்போது காலிஸ்தான் குழுவைச் சேர்ந்த பத்து பதினைந்து பேர் இந்தியாவுக்கு எதிராக கோஷம் போட முயற்சித்தனர். ஆனால் இந்திய ஆதரவு கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் அங்கிருந்து விலகிச்சென்றனர்

இதே போன்று லண்டனில் உள்ள இந்திய தூதரக வளாகத்திலும் இந்தியாவின் 73வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

Related Posts