சுதந்திர தினவிழாவையொட்டி அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு பணிகள் தீவரம்

சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி நடைபெறுவதையொட்டி பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு பணிகளை காவல்துறையினர் தீவிரப்படுத்த தொடங்கி உள்ளனர்.

சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று மத்திய உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கொடுத்துள்ளது. இதையடுத்து சுதந்திர தின பாதுகாப்பு பணிகளை காவல்துறையினர் தீவிரப்படுத்த தொடங்கி உள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய கோவில்கள், பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், பொழுது போக்கு பூங்காக்களில் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார். வாகன சோதனை நடத்துவதற்காக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக தனியாக கூட்டம் நடத்த அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டு உள்ளது. சுதந்திர தினம் முடியும் வரை தொடர் வாகன சோதனை நடத்தப்பட உள்ளது.

Related Posts