சுதந்திர தின கொண்டாட்டம் : டெல்லியில் ஒத்திகை நிகழ்ச்சி

டெல்லியில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஒத்திகை நிகழ்ச்சி மும்முரமாக நடைபெற்றது.

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முப்படையினர், போலீசார், எல்லை பாதுகாப்பு படையினர், தேசிய மாணவர் படையினர் என அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர். மேலும் விழாவின் போது செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றுவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், விழா நிகழ்ச்சிகளை வரிசையாக நடத்துவது குறித்தும் ஒத்திகை பார்க்கப்பட்டது. ஒத்திகை நிகழ்ச்சியை ஒட்டி, செங்கோட்டையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

Related Posts