சுதந்திர தின விழாவை முன்னிட்டு : தீவிர சோதனை

சுதந்திர தின விழாவை முன்னிட்டு அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு புதுச்சேரி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், கடற்கரை சாலை மற்றும் முக்கிய சுற்றுலாத் தளங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக பேருந்து நிலையம் , ரயில் நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டது. காவல் கண்காணிப்பாளர் மாறன் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் காட்பாடியிலிருந்து புதுச்சேரிக்கு வந்த பயணிகள் ரயிலில் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.  இதேபோல் புதுச்சேரி எல்லைப்பகுதிகளில் வாகன சோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரி கடற்பகுதிகளிலும் தீவிர ரோந்து பணியில் கடற்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related Posts