சுனாமியே வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது

        எந்த பக்கத்தில் இருந்து எத்தனை சுனாமி வந்தாலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் தனக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை சீர்குலைக்க முடியாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் அதிமுக நிர்வாகியின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

விழா மேடையில் பேசிய  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி    அதிமுக ஒரு குடும்பம் என்றும் எதிர்கட்சிகளின் சதித்திட்டங்களை தொண்டர்களின் ஆதரவோடு முறியடிப்போம் என்றும் பேசினார்.

விழா மேடையில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து  செய்து வருவதாகக் கூறினார். எந்த பக்கமிருந்து எத்தனை சுனாமி வந்தாலும் தங்கள் இருவரின் ஒற்றுமையை அசைக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

Related Posts