சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், அதிமுக பிரமுகர் மீது மேலும் ஒரு பிரிவில் வழக்குப்பதிவு

சென்னையில், பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், அதிமுக பிரமுகர் மீது மேலும் ஒரு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்ட நிலையில், விபத்துக்கு காரணமான பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெயகோபால் மீது 308-வது பிரிவின் கீழ் பரங்கிமலை போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது, மரணம் விளைவிக்கும் குற்றத்தை செய்ய முயற்சித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயகோபால் உறவினர் மேகநாதன் பெயரையும் முதல் தகவல் அறிக்கையில் போக்குவரத்து புலனாய்வு போலீஸ் சேர்த்துள்ளது.

Related Posts