சுபஸ்ரீ வழக்கில் கவுன்சிலர் ஜெயகோபாலின் மைத்துனரான மேகநாதன் கைது

சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில், முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலின் மைத்துனரான மேகநாதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சுபஸ்ரீ உயிரிழக்கக் காரணமான பேனரை வைத்த ஜெயகோபால், நேற்று முன் தினம், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள சொகுசு விடுதியில் கைது செய்யப்பட்டார். ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட ஜெயகோபாலை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிப்பட்டதை அடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பேனருக்கு இரும்புச் சட்டம் வழங்கியவரும், ஜெயகோபாலின் மைத்துனருமான மேகநாதனை போலீசார் தேடி வந்தனர். காஞ்சிபுரத்தில் நேற்று கைது செய்யப்பட்ட அவரை, அண்ணா நகரில் உள்ள ஆலந்தூர் நீதிமன்ற நீதித்துறை நடுவர் ஸ்டாலின் முன் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஆஜர்படுத்தினர். அக்டோபர் 10 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து மேகநாதன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Related Posts