சுமுகமாக நடைபெறும் வாக்கு பதிவு

வேலூரில் சுமுகமாக வாக்கு பதிவு நடைபெற்று வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வேலூரில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தல் சமுகமாகவும், தொழில்நுட்ப கோளாறு இன்றியும் வாக்குப்பதிவு நடப்பதாகக் கூறினார்.  11 மணி நிலவரப்படி 14.61 சதவிகித வாக்குகள் பதிவானதாக குறிப்பிடட அவர், 850 வாக்குச்சாவடிகள் காணொளி காட்சி மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதனிடையே வேலூரில்  14.36 வாக்குப்பதிவும், அணைக்கட்டு பகுதியில் 12.56 சதவீதமும், கே.வி குப்பத்தில் 16.90 சதவீதமும்,குடியாத்தத்தில்  15.19 சதவீதமும்,  வாணியம்பாடியில்  16.32 சதவீதமும்,  ஆம்பூரில் 12.40 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

Related Posts