சுயநிதி மீன்வளக்கல்லூரி அமைப்பதை கைவிட வலியுறுத்தி மீன்வளக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

சுயநிதி மீன்வளக்கல்லூரி அமைப்பதை கைவிட வலியுறுத்தி, தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மாணவர்கள் வகுப்புக்களை  புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்,

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் சுய நிதி மீன்வளக் கல்லூரி அமைப்பதை கைவிட வேண்டும் என தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் வலியுறுத்தி வந்தனர். இவர்களில் 11 பேரை கல்லூரி நிர்வாகம் 6 மாதம் இடைநீக்கம் செய்தது.

இதனால் ஆவேசமடைந்த மாணவர்கள், இடைநீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி வகுப்புக்களை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Posts