சுற்றுச்சூழல் அனுமதியின்றி கோதாவரி-பெண்ணாறை இணைக்க கூடாது : தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி

சுற்றுச்சூழல் அனுமதியின்றி கோதாவரி-பெண்ணாறை இணைக்க கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறுகள் இணைப்பு திட்டத்தை சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் ஆந்திர மாநில அரசு நிறைவேற்றக்கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று அதிரடியாக உத்தரவிட்டது.

இது தொடர்பாக நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பிராந்திய அலுவலகம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி நதிகளை இணைத்தால் தமிழ்நாட்டின் தென்கோடி வரையில் தண்ணீர் கிடைக்கும் என்று ஏற்கனவே மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உறுதி அளித்தது நினைவுகூரத்தக்கது.

Related Posts