சுற்றுலாத்தலமாக மாறும் காரைக்கால் கடற்கரை

இயற்கை சார்ந்த சுற்றுலாத்தலமாக காரைக்கால் கடற்கரையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக  மாவட்ட ஆட்சியர்  விக்ராந்த்ராஜா தெரிவித்துள்ளார்.

காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் கடற்கரையில் ஒருமுறை மட்டும் பாயன்படுத்தும்  பிளாஸ்டிக்  குறைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

முன்னதாக உலக கடற்கரை தூய்மை தினத்தையொட்டி இந்திய கடலோர காவல்படை, காரைக்கால் மாவட்ட நிர்வாகத்துடன்  இணைந்து கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். இதில் பள்ளி ,கல்லூரி , மாணவ, மாணவிகள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Posts