சுவர் ஏறி குதித்து செய்த சி.பி.ஐ.

சுவர் ஏறி குதித்து சி.பி.ஐ. அதிகாரிகள் சிதம்பரம் வீ்ட்டிற்குள் நுழைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் தேடி வரும் நிலையில் டில்லி தலைமை அலுவலகத்தில் சிதம்பரம் பேட்டியளித்தயைடுத்து காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் விரைந்தனர். உடனே அங்கிருந்து காரில் ஜோர்பாக் நகரில் உள்ள தனது வீட்டிற்கு ப. சிதம்பரம் விரைந்து சென்றார். உடனே சி.பி..ஐ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விடாமல் துரத்தி சிதம்பரம் வீட்டிற்கும் வந்தனர். அப்போது சிதம்பரத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி, ஆகியோர் உடனிருந்தனர்.

சிதம்பரம் வீட்டின் கேட் பூட்டப்பட்டதால் அதிகாரிகள் வீட்டின் கதவை தட்டினர்.கதவு திறக்கப் படாததால் அதிகாரிகள் உடனே சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர். ஒரு பிரிவினர் முன் பக்க வழியாகவும், ஒரு பிரிவினர் வீட்டின் பின் பக்க வழியாகவும் உள்ளே நுழைந்தனர். சி.பி.ஐ., அதிகாரிகளை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் சுவர் ஏறி குதித்தனர்.

சிதம்பரம் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்த சி.பி.ஐ., அதிகாரிகள் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என கருதி டில்லி போலீசாரிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து டில்லி போலீசாரும் சிதம்பரம் வீ்ட்டிற்கு வருகை தந்தனர். இதையடுத்து சிதம்பரம் வீட்டின் முன்பு காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்து மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Posts