சுவீடன் நாட்டின் பிரதமர் ஸ்டீபன் லாப்வென் பதவியில் இருந்து நீக்கம்

சுவீடன் நாட்டின் பிரதமர் ஸ்டீபன் லாப்வென் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறியதை அடுத்து அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

            சுவீடன் நாட்டின் பிரதமராக ஸ்டீபன் லாப்வென் இருந்து வந்தார். அவர் மீது அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 204வாக்குகளும், எதிராக 142 வாக்குகளும் பதிவாகின.. இதையடுத்து, நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து ஸ்டீபன் லாப்வென் நீக்கப்பட்டார்.  இந்நிலையில், அங்கு ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக கட்சித்தலைவர்களுடன் நாடாளுமன்ற சபாநாயகர் ஆண்ட்ரியாஸ் நார்லென் நாளை பேச்சு நடத்துவார் எனவும், புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை ஸ்டீபன் லாப்வென், இடைக்கால பிரதமராக நீடிப்பார் எனவும்,தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts