சமையல் குறிப்புலைஃப் ஸ்டைல்

சுவையான ரவா கீர் செய்வது எப்படி ?

ரவா கீர் அல்லது சுஜி கீர் என்பது பண்டிகைகளின் போதும் விரதங்களின் போதும் விரும்பி செய்யப்படும் ரெசிபி ஆகும். பண்டிகைகளின் போது நிலவும் பரபரப்பான வேலை சூழ்நிலையில் கூட நீங்கள் இந்த ரெசிபியை எளிதாக செய்து அசத்திடலாம். இது சுவையோடு ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய ரெசிபி யும் கூட. சுவை மிகுந்த க்ரீமி டேஸ்டுடன் உங்கள் விருந்தினருக்கும் விருந்தளிக்கலாம்.

செய்யத்  தேவையானப் பொருட்கள்:

ரவை – 3/4 கப்

ஏலக்காய் பொடி – 2 டீ ஸ்பூன்.

நெய் – 1-2 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை – 1 கப்

முந்திரி பருப்பு (உடைத்தது) -8-10

உலர்ந்த திராட்சைபழங்கள் – 10-12

பால் – 1/2 பெளல்

தண்ணீர் – 4-5 கப்

 

 

 

 

 

செய்யும் முறைகள்:

ஒரு கடாயை எடுத்து கொள்ளுங்கள். 2 நிமிடங்கள் கடாய் சூடானதும் நெய்யை இருக்க வேண்டும். பிறகு அதில் பால் சேர்த்து கிளறிக் கொண்டே கட்டியில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் ஊற்றவும் நெய் உருகும் வரை காத்திருக்க வேண்டும். நெய் நன்கு காய்ந்ததும் அதில் முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை பழங்கள் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும் வறுத்ததை எடுத்து ஒரு பெளலில் வைத்து கொள்ளவும். இப்பொழுது அதே கடாயில் ரவையை பொட்டி சில நிமிடங்கள் வறுக்கவும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கிளறிக் கொண்டே மிதமான தீயில் 4-5 நிமிடங்கள் சமைக்கவும். இப்பொழுது சர்க்கரையை சேர்த்து சர்க்கரை முழுமையாக கரையும் வரை காத்திருக்கவும் இப்பொழுது வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை பழங்கள், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும். சில நிமிடங்கள் அப்படியே அடுப்பில் வைத்து இருக்கவும் பிறகு ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளுங்கள் சூடாக அல்லது ஆறிய பிறகு பரிமாறவும்.

சுவையான ரவா கீர் ரெடி

Tags
Show More

Related News

Back to top button
Close