சுஷ்மா சுவராஜ்,வியட்நாம் பிரதமர் நிகுயென் சுவான் புக் சந்திப்பு

அரசு முறை பயணமாக வியட்நாம் சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அந்நாட்டு பிரதமர் நிகுயென் சுவான் புக்கை சந்தித்துபேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தியா – வியட்நாம் வெளியுறவுத்துறை சார்ந்த 16-வது கூட்டத்தில் பங்கேற்க சுஷ்மா சுவராஜ் வியட்நாம் சென்றுள்ளார்.  நான்கு நாள் அரசு முறைப் பயணமாக சென்றுள்ள அவர்,  வியட்நாம் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு கம்போடியா செல்கிறார்.

ஆசியான் பகுதியில் உள்ள இந்த இரு நாடுகளுடன், இந்தியாவின் உத்திசார் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் சுஷ்மாவின் பயணம் அமையும் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில் வியட்நாம் வெளியுறவுத் துறை அமைச்சர் பாம் பின் மின் தலைமையில் நடைபெற்ற 16-ஆவது கூட்டு மாநாட்டில் சுஷ்மா, கலந்து கொண்டார்.

இதை தொடர்ந்து, வியட்நாம் பிரதமர் நிகுயென் சுவான் புக்குடன் சுஷ்மா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இருநாட்டு நல்லுறவு குறித்து ஆலோசிக்கப்பட்டது.  நாளை கம்போடியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சுஷ்மா ஸ்வராஜ், கம்போடியா பிரதமர் ஹன் சன், அதிபர் சேசூம் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

Related Posts