சுஷ்மா சுவராஜ் மறைவு இந்திய அரசியலுக்கும் பாஜகவுக்கும் பேரிழப்பு : அமித்ஷா

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

சுஷ்மா சுவராஜ் மறைவு இந்திய அரசியலுக்கும் பாஜகவுக்கும் பேரிழப்பு என உள்துறை அமைச்சர் அமித்ஷா  தெரிவித்துள்ளார்.

சுஷ்மா சுவராஜ் காலமானதை அறிந்து  அதிர்ச்சி அடைந்த்தாகவும், இந்த  செய்தியை ஏற்றுக்கொள்வது கடினம் எனவும், ஒட்டுமொத்த தேசமும்  வருத்தமடைவதாக வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

சுஷ்மா சுவராஜ் கண்ணியமான நாடாளுமன்றவாதி’ என்று பாஜக செயல் தலைவர் – ஜே.பி.நட்டா  தெரிவித்தார்.

சுஷ்மா சுவராஜ் மறைந்தது அறிந்து  நான் அதிர்ச்சி அடைந்த்தாகவும், அவர் ஒரு சிறந்த அரசியல் தலைவர் எனவும் திறமையான சொற்பொழிவாளர். நாடாளுமன்றத்திற்கு கிடைத்த ஒரு அபூர்வ மனிதர் எனவும் கட்சி வழியே சிறந்த நட்புடன் பழகியவர் எனவும் அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் எனவும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரித்துக்கொள்வதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

சுஷ்மா சுவராஜ் காலமானதை அறிந்து தாங்கள் அதிர்ச்சி அடைந்த்தாகவும், அவர் தங்களை விட்டு விரைவில் செல்வார் என்று தாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை என்றும் கடந்த 42 ஆண்டுகளாக நாங்கள் நண்பர்களாக இருந்தோம்  என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

மிகத் திறமையான வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எனவும் விவரங்களுடன் எதையும் பேசக்கூடியவர்; மகத்தான திறமையும் சக்தியும் கொண்டவர்   என்று மார்க்சிஸ்ட் எம்.பி., ரெங்கராஜன் கூறியுள்ளார்.

பாஜகவில் உள்ள பெண் நிர்வாகிகளுக்கு உதாரணமாக இருந்தவர் சுஷ்மா சுவராஜ் என்றும் பெண்கள் வாழ்வில் முன்னேறுவது தான் சுஷ்மா சுவராஜூக்கு  செலுத்தும் அஞ்சலியாக இருக்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஆளுமையும் அன்பும் நிறைந்த பெண் தலைவராக இருந்தவர் என்றும் கட்சிகள், மாநிலங்களுக்கு அப்பாற்பட்டு மக்களுக்கு உதவியவர் சுஷ்மா சுவராஜ் என்றும் திமுக எம்.பி., கனிமொழி கூறியுள்ளார்.

சுஷ்மா சுவராஜின் மறைவுக்கு அதிமுக முன்னாள் எம்.பி., மைத்ரேயன், பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

 

 

Related Posts