சுஷ்மா சுவராஜ் மறைவு : மத்திய அமைச்சர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல்

முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் மாரப்படைப்பால் காலமானார்.

பா.ஜ.,வின், மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ்,  கடந்த 2014 மக்களவை தேர்தலில், மத்திய பிரதேச மாநிலம், விதிஷா தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். மோடி அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக திறம்பட பணியாற்றினார். சர்க்கரை நோயாளியான சுஷ்மாவுக்கு, 2016ல், சிறுநீரகங்கள் செயல் இழந்தன. டில்லி, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில், அவருக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இதையடுத்து நடந்து முடிந்த 2019 மக்களவை தேர்தலில் போட்டியிடாமல் தீவிர அரசியலில் இருந்து விலகினார்.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுஷ்மா சுவராஜ்   மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 67. அவரது மறைவை கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் எஸ்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.  சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு மத்திய அமைச்சர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Related Posts