4 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

காலியாக உள்ள திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதையடுத்து, உடனடியாக தேர்தல் பணிகளைத் தொடங்கும் வகையில், திமுக தனது வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளது.

அதன்படி,  திருப்பரங்குன்றம் – டாக்டர் சரவணன் ,  சூலூர் – பொங்கலூர் பழனிசாமி , அரவக்குறிச்சி – செந்தில்பாலாஜி , ஓட்டப்பிடாரம் – எம்.சி. சண்முகையா ஆகியோர் திமுக வேட்பாளராகப் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts