செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டம்

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, பணிகளை புறக்கணித்து நுழைவாயில் அமர்ந்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில் உள்ள ஓட்டலில் வழக்கறிஞர்களுக்கும், கடை ஊழியர்களுக்கும் இடையே பலத்த மோதல் ஏற்பட்டது. இதில், இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப்பிரிவில் நள்ளிரவில் அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில் சிகிச்சைக்கு வந்த வழக்கறிஞர்கள் அங்கு பணியிலிருந்த  மருத்துவரை தாகாத வார்த்தைகளால் பேசி,  தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் மருத்துவமனையில் உள்ள உபகரணங்களை சேதப்படுத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனை வளாகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு கோரியும் , தாக்குதலில் ஈடுபட்டவர்கள்  மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Posts