செங்கல்பட்டு, பாலூர் ஆகிய ரயில் நிலையங்களில் திடீர் மறியல்

மின்சார ரயில்கள் தாமதாக இயக்கப்படுவதை கண்டித்து செங்கல்பட்டு, பாலூர் ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் தண்டவாளத்தில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம் நடந்து வருகிறது. இதையொட்டி, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து, அத்திவரதரை தரித்து செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக சென்னை கடற்கரை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, வாலாஜாபாத் காஞ்சிபுரம் வழியாக அரக்கோணத்துக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் அரக்கோணத்திலிருந்து செங்கல்பட்டு வழியாக  சென்னை செல்லும் ரயில்கள் 30 நிமிடம் தாமதமாக செல்வதால் பணிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத்தால் ஆத்திரமடைந்த பயணிகள்,  செங்கல்பட்டு ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த இரயில்வே காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தையடுத்து போராட்டம் கைவிடபட்டது.

Related Posts