செங்குன்றம் அருகே, சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, வாகன ஓட்டுநர்கள் சாலைமறியலில் 

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே நல்லூர் பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடிஊழியர்களுக்கும், வேன் ஓட்டுனர்கள் பன்னீர்செல்வம்  மற்றும் ஜேம்ஸ் ஆகியோருக்கும், , கட்டணம் செலுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.  அப்போது,  அங்கிருந்த வடமாநிலத்தை சேர்ந்த ஊழியர்கள்,  வேன் ஓட்டுநர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து, அனைத்து வாகன ஓட்டுநர்களும்  மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அங்கு திரண்ட   பொதுமக்கள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டத்து. தகவலறிந்து வந்த காவல்துறையினர்  சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து,  போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Related Posts