சென்னையில் அதிகாலை முதல் பரவலாக சாரல் மழை

சென்னை நகரில் அதிகாலை முதல் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.

மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரம் மழை நீடித்தது. இதே போல், தேனி, திண்டுக்கல், நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது. நாகப்பட்டினம், கீழ்வேளூர், தேவூர், ஆழியூர், திருப்பூண்டி, திருக்குவளை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதனால் சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, ஓசூர், சூளகிரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. கரூர், பெரம்பலூர், தேனி, சேலம், தர்மபுரி, திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களிலும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திலும் மழை பெய்துள்ளது.

Related Posts