சென்னையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை மேற்கொண்டார்

இந்தியாவில் மக்களவைத் தேர்தலை, 7கட்டங்களாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.  தேர்தலை சுமுகமாக நடத்தி முடிக்க, தேர்தல் அதிகாரிகள் முழுவீச்சில் பணியாற்றி வருகின்றனர்.. தேர்தல் செலவுகளை கண்காணிக்க அனைத்து தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படையினர் தொடர்ந்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் பணிகளை ஆய்வு செய்ய நேற்று சென்னை வந்த  தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா,ஆணையர்கள் அசோக் லவாசா, சுசில் சந்திரா ஆகியோர் . அங்கீகரிக்கப்பட்ட 10 அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினர். பின்னர் ஒவ்வொரு கட்சி பிரதிநிதிகளிடமும் தனித்தனியே ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார், பாபு முருகவேல், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர். திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி,  இளங்கோ, தேமுதிக சார்பில் சந்திரன், பாஜக சார்பில் திருமலைசாமி, காங்கிரஸ் சார்பில் தாமோதரன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

Related Posts