சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேல்முருகன் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை : ஏப்ரல்-23

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், மத்திய அரசு தமிழகத்தின் வளங்களையும், எதிர்கால நலன்களையும் பறித்து வருகிறது என்று குற்றம்சாட்டினார்.

(பைட் – வேல்முருகன்)

இதைத்தொடர்ந்து, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.  

Related Posts