சென்னையில் இன்று திமுக தோழமை கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்

 

 

காவிரி விவகாரம் தொடர்பாக  சென்னையில் திமுக தோழமை கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில்  மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், மத்திய அரசு  எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. கர்நாடக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதால் மத்திய பாஜக அரசு இந்த விவகாரத்தை தொடர்ந்து இழுத்தடித்து வருகிறது. தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் திமுக தலைமையிலான தோழமை கட்சியினர் அடுத்தடுத்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க திமுக தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெற உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ள இந்தக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு தோழமை கட்சித் தலைவர்களுக்கு திமுக சார்பில் ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts