சென்னையில் இருந்து ஆந்திரா செல்ல வெங்கையா நாயுடுவுக்கு நவீன சொகுசு ரெயில் பெட்டி 

துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு வருகிற 23-ந் தேதி சென்னையிலும், ஆந்திராவிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அன்றைய தினம் சென்னையில் இருக்கும் வெங்கையா நாயுடு ஆந்திர சென்று ஸ்ரீசிட்டியில் ஒரு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக மீனம்பாக்கம் அருகில் உள்ள திரிசூலத்தில் இருந்து ரெயிலில் புறப்படுகிறார். பின்னர் அங்கிருந்து சென்னை வந்து பழைய மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். இதனை தொடர்ந்து சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு பள்ளியின் பிளாட்டினம் ஜியோ விழாவில் கலந்து கொள்கிறார். இதையொட்டி துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பயணம் செய்வதற்காக அவர் செல்லும் ரெயிலில் நவீன சொகுசு ரெயில் பெட்டி இணைக்கப்படுகிறது. இந்த பெட்டியில் 5 நட்சத்திர விடுதியில் உள்ளதைப்போல் மெத்தை, படுக்கை, அலங்கார பொருட்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கும். துணை குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி அவர் செல்லும் ரெயிலுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.இதேபோல் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Posts