சென்னையில் இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு  அஞ்சலி

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு  அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சென்னை கோட்டூர்புரத்தில்  உள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ,தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சித்  தலைவர் திருமாவளவன் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி  , மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இதனை தொடர்ந்து  அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி இரண்டு நிமிடம் மவுன  அஞ்சலி செலுத்தினர்.

Related Posts