சென்னையில் காவிரிக்கான தமிழகத்தின் குரல் என்ற பெயரில் கமல்ஹாசன் ஆலோசனை

 

 

சென்னையில் காவிரி விவகாரம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்  நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

காவிரிக்கான தமிழகத்தின் குரல் என்ற பெயரில் மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சென்னையில் இன்று ஆலோசனைக்கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த கூட்டத்தில் பங்கேற்க வருமாறு  அனைத்துக்கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாய அமைப்புகளின் தலைவர்களுக்கு கமல் அழைப்பு விடுத்திருந்தார். திமுக தோழமை கட்சிகள்,அதிமுக கூட்டணி கட்சிகள்,பாஜக மற்றும் பல கட்சிகள் இந்தக் கூட்டத்தை புறக்கணித்த நிலையில், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு,  லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர், நடிகர் சங்க தலைவர் நாசர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகி தங்க தமிழ்ச்செல்வன், அர்ஜுன் சம்பத், வசீகரன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு பற்றியும், தமிழக விவசாயிகளுக்கான செயல் திட்டம் குறித்தும் இந்தக்கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.ராஜேந்தர், தமிழக மக்கள் நலனை அதிமுக அரசு அடகு வைத்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.

Related Posts