சென்னையில் டிசம்பர் மாதம் வரை குடிநீர் பற்றாக்குறை இருக்காது : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

 

 

சென்னையில் வருகிற டிசம்பர் மாதம் வரை குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னை, ஏப்ரல்-11

தமிழ்நாட்டின் கோடைகால தண்ணீர் தேவையை சமாளிப்பது பற்றி, சென்னை சிந்தாதிரிபேட்டையில் அமைந்துள்ள குடிநீர் வழங்கல் வாரிய அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழகத்தில் கோடைக்காலத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் தடுக்க மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். சென்னையில் டிசம்பர் மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்று குறிப்பிட்ட அமைச்சர், பல்வேறு பகுதிகளில் இருக்கும் கிணறுகளில் இருந்து மோட்டார் மூலமாக தண்ணீரை இரைத்து, சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார். அதோடு, பயன்பாட்டில் இல்லாத கிணறுகளில் இருக்கும் தண்ணீரை சுத்தப்படுத்தி, அதனை குடிநீராக வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக, எஸ்.பி.வேலுமணி கூறினார். 

Related Posts