சென்னையில் தங்கத்தின் விலை குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் ஒன்றுக்கு 120 ரூபாய் குறைந்து 28ஆயிரத்து 824 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை, அண்மையில்  சவரன் ஒன்று 30 ஆயிரத்தைத் தொட்டது. தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த நிலையில், சென்னையில் இன்று  ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை மூவாயிரத்து 603 ரூபாய்க்கும், ஒரு சவரன் 28 ஆயிரத்து  824 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. சில்லரை வெள்ளியின் விலை ஒரு கிராம் 48 ரூபாய் 50 காசுகளுக்கும், கட்டி வெள்ளியின் விலை ஒரு கிலோ 48  ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Related Posts