சென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய சென்னைக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் அமமுக மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முயற்சித்ததாகவும், அதைத் தட்டிக்கேட்ட திமுகவினர் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை திமுக பிரமுகர் பரமசிவத்திற்கு சொந்தமான டி.பி.சத்திரம் வீட்டில், முகத்தை மூடியபடி சென்ற மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிச்சென்றனர். இதில் அவரது கார் சேதமடைந்தது. இதுதொடர்பான காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட இடத்தை பார்வையிட்ட மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பாமகவினர் இங்கு அதிகளவில் தங்கியிருப்பதாகக் கூறினார். பெட்ரோல் குண்டுவீச்சில் பாமகவுக்கு தொடர்பிருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

Related Posts