சென்னையில் நடைபெற்ற ஊர்வலத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்

முகரம் தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற ஊர்வலத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

      ஈராக் நாட்டின் கர்பாலா என்னும் இடத்தில் நபிகள் நாயகம் முகமதுவின் பேரனான இமாம் ஹூசேன்  மற்றும் அவரின் குடும்பத்தினர் இஸ்லாமிய மத கட்டளையைப் பாதுகாக்கும் பொருட்டு தங்களின் இன்னுயிரை தியாகம் புரிந்த நாளே முகரமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

      உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள், கொள்கைக்காக மடிந்த இமாம் மற்றும் அவரது குடும்பத்தினரின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் முகரம் தினத்தன்று ஊர்வலங்கள் நடத்துகின்றனர் இதன்படி முகரம் இன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி சென்னை ராயபேட்டை, ஜானி ஜான் கான் சாலையியல், ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் தங்களைத் தானே கத்தியால் அடித்துக் கொண்டு ஆயிரம் விளக்கு மசூதி வரை ஊர்வலமாகச் சென்றனர்.

      இது குறித்து ரியாசத் அலி என்பவர் கூறுகையில், இஸ்லாமிய மக்களை காக்க தன்னுயிர் நீத்த இமான் ஹுசேன் மற்றும் அவரது சீடர்கள் 72 பேர் இறந்த நாளை மொஹரம் என அனுசரிக்கப்படுவதாக கூறினார். இஸ்லாமிய மக்கள்  தொடர்ந்து தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்

Related Posts