சென்னையில் நடைபெற்ற குவாலிபையர்-1ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது

ஐபிஎல் தொடரின் குவாலிவையர்-1 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்  நேற்று இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் டோனி பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து, சென்னை அணியின் தொடக்க  ஆட்டக்காரர்களாக வாட்சன், டு பிளிசிஸ் களமிறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்தில் மும்பை அணியினரின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. இதனால் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன. டு பிளசிஸ் 6 ரன்னிலும், ரெய்னா 5 ரன்னிலும், வாட்சன் 10 ரன்னிலும் ஆட்மிழந்தனர். இதனை  தொடர்ந்துமுரளி விஜய்-யுடன், அம்பதி ராயுடு இணைந்தார்.. ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய முரளி விஜய் 26 ரன்னில் வெளியேறினார். அப்போது அணியின் எண்ணிக்கை 4 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து களம் இறங்கிய  கேப்டன் டோனி இருவரும் பவுண்டரி, சிக்சராக விளாசினர். இறுதியில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 131 ரன்கள் எடுத்தது. மும்பை அணி சார்பில் ராகுல் சாஹர் 2 விக்கெட்டும், குருணால் பாண்டியா, ஜெயந்த் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களம் இறங்கியது. . ரோகித் சர்மா 4, டி காக் 8  ஆகியோர் வந்த வேகத்தில் வெளியேறினர்.  சூர்யா குமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடினர். மும்பை அணி 101 ரன்கள் இருந்தபோது இஷான் கிஷன் 28 வெளியேறினார். அடுத்து வந்த குர்ணால் பாண்டியா டக் முறையில் வெளியேறினார். இந்நிலையில் ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யா குமார் யாதவ் அணியை வெற்றி பெற செய்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி 9 பந்துகள் மீதம் உள்ள நிலையில்  சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சூர்யா குமார் யாதவ் 71 கடைசி வரை ஆட்டமிழக்காமல்  களத்தில் இருந்தனர். சென்னை அணி தரப்பில் இம்ரான் தாகீர் 2 விக்கெட்டும் ஹர்பஜன், சாஹர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Related Posts