சென்னையில் நாளை ஜனநாயக உரிமைகளை மீட்பதற்கான அறப்போர் ஆர்ப்பாட்டம்

சென்னையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில், ஜனநாயக உரிமைகளை மீட்பதற்கான அறப்போர் ஆர்ப்பாட்டம் நாளை நடைபெறவுள்ளது.

சென்னை : மே-15

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஜனநாயக உரிமைகளை மீட்பதற்கான அறப்போர் ஆர்ப்பாட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக நிர்வாகி வி.பி. துரைசாமி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழநெடுமாறன், முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன், அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரும் இந்த அறப்போர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

Related Posts