சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் குறைப்பு

கச்சா எண்ணெய் விலை குறைவால், இன்றும் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை : ஜூன்-06

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக, பெட்ரோல் டீசலின் விலை கடந்த சில நாட்களாக உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில், கச்சா எண்ணெய் விலை குறைவால், சென்னையில் இன்று காலை பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் குறைந்து, 80 ரூபாய் 68 காசுகளுக்கு விற்கப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து, 72 ரூபாய் 64 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts