சென்னையில் ரஜினிகாந்த் மன்ற இளைஞரணி நிர்வாகிகளுடன் ஆலோசனை

 

 

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற இளைஞர் அணி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்,  சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் இல்லத்தில் கடந்த 10ஆம் தேதி நடைபெற்றது. அப்போது உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.  இளைஞர்களை அதிகளவில் சேர்ப்பது தொடர்பாகாவும் மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக,  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ரஜினி மக்கள் மன்ற இளைஞரணி நிர்வாகிகளுடன், ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மன்றத்தின் மாநாட்டை எங்கு நடத்துவது என்பது குறித்தும், அடுத்த நடவடிக்கைகள் குறித்து  ரஜினிகாந்த் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Related Posts