சென்னையில் 500 புதிய அரசு பேருந்துகள்

சென்னையில் 500 புதிய அரசு பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் சுமார் 154 கோடி ரூபாய் மதிப்பிலான 500 புதிய பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் பழனிசாமி  தொடங்கி வைத்தார். இதில் 15 பேருந்துகள் கிளாசிக் எனப்படும் கழிவறை வசதி கொண்டவை. போக்குவரத்து கழகங்கள் வாரியாக சென்னைக்கு 235, விரைவு போக்குவரத்து கழகத்துக்கு – 118, விழுப்புரத்துக்கு -18, சேலத்துக்கு – 60, கோவைக்கு – 16, கும்பகோணத்துக்கு – 25, மதுரைக்கு – 14, நெல்லைக்கு – 14 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.  பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேருந்தின் இருபுறமும் அவசர கால வழிகள் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக தனித்தனி இருக்கைகள் மற்றும் பயணிகள் நின்று பயணிக்க ஏதுவாக அகலமான பாதைகள் உள்ளன. பயணிகள் இருக்கும் இடத்தை அறிவிக்கும் ஒலிபெருக்கி வசதிகள், பயணிகள் வழித்தடத்தினை எளிதில் அறிந்து கொள்ள மின்னணு வழித்தட பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு விரைவு பேருந்துகளில் படுக்கை வசதி இருக்கை மற்றும் கழிப்பறை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Related Posts