சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில்,   நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்  முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான 44-வது லீக் போட்டி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து  முதலில் களமிறங்கிய  மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை எடுத்தது.

156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி

17.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் மும்பை  அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

Related Posts