சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் ஆஜர்

வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகளை மறைத்தது தொடர்பான வழக்கில், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் ஆஜராகினர்.

சென்னை : ஜூன்-25

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ப.சிதம்பரம் அமைச்சராக இருந்தபோது, அவரது மனைவி நளினி, மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் பெயரில், வெளிநாடுகளில் சொத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த  சொத்துக்களை மறைத்ததாக, வருமான வரித்துறை அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. 3 பேரும் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த பின்னர், கருப்புப் பணம் தடுப்புச் சட்டத்தின்கீழ், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மற்றும் கார்த்தியின் மனைவி ஸ்ரீநிதி ஆகியோர், எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அடுத்த மாதம் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Related Posts