சென்னை காவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காய்ச்சல் மற்றும் சிறுநீரக நோய்த்தொற்று காரணமான கடந்த இரண்டு நாட்களாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தொடர் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி, இன்று அதிகாலை சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை காரணமாக ரத்த அழுத்தம் சீராகியுள்ளது.இருப்பினும் அவரது உடல்நிலை 24 மணி நேரமும் சிறப்பு மருத்துவக்குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கலைஞரின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்த நிலையில், இன்று தலைவர்கள் பலர் அவரது நலம் குறித்து விசாரித்தனர்.