சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வண்ணம் பூசப்பட்ட மின்சார ரெயில்  

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கும்  தாம்பரத்திற்கும் இடையே மகளிருக்காக மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த ரயிலின் இருபுறங்களிலும்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் புகைப்படத்துடன் கூடிய  விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.   இந்த ரெயில் சென்னை நகர மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இந்த ரயிலில் பயணம் செய்ய பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts